தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிப்பதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி மாவீரர் லெப். சங்கர் அவர்களின் தந்தை இன்று பிரித்தானியாவில் காலமாகியுள்ளார் அவருக்கு எமது புகழ்வணக்கம்
மேலும் படிக்கAuthor: Olikkeetttu@gmail.com
கொத்மலை பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர்!
நுவரெலியா கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் ஏற்பட்ட பஸ்விபத்தில் காயமடைந்தவர்களை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று கம்பளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் இதன் போது அங்கு சென்ற பிரதமர் காயமடைந்தவர்களின் நலத்தினை விசாரித்ததோடு வைத்தியசாலையில் செயலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சைகள் மற்றும் வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார் இதேவேளை அமைச்சர் பிமல் ராமநாயக்கவும் சென்றிருந்தார். சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இது போன்ற வாகன விபத்துக்களினால் ஒவ்வொரு வருடமும் உயிர்ழப்புகள் ஏற்படுகின்றமை பாரிய பிரச்சினையாக மாரியுள்ளது என்பது எமக்கு தெரியும் இதனை தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பின் தங்கிய பிரதேசமாக இருந்தாலும் வைத்திய சேவையினை வழங்குகின்றமை தொடர்பில் அவர்களுக்கு நாம் நன்றி கூற வேண்டும் இதேவேளை மீட்பு பிரிவினருக்கும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். முடியுமான…
மேலும் படிக்கதையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தையிட்டியில் மக்களின் காணிகளை அடாத்தாக பிடித்து பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அந்நிலையில் இன்றைய தினமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்கவெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் 04 பேர் விமான நிலையத்தில் கைது
600 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நான்கு சந்தேகநபர்கள் நேற்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதுடன் அவர்கள் வெல்லம்பிட்டிய, தெமட்டகொட, பம்பலப்பிட்டிய மற்றும் கொஸ்வத்த பகுதிகளைச் சேர்ந்த 25 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அண்மைக் காலங்களில் கைப்பற்றப்பட்ட அதிகளவான சிகரெட் தொகை இதுவாகும் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்படி சந்தேகநபர்கள் நால்வரும் விமான நிலையத்தை விட்டு பல்வேறு வகையில், வெளியேற முயன்றபோதும் அவர்களது அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவர்களை சோதனையிட்டபோது அவர்களின் 20 பைகளிலிருந்து மேற்படி சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவ்வாறு…
மேலும் படிக்கமுட்டையின் விலை குறைந்து ள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் முட்டைகள் 20 ரூபாய் முதல் 24 ரூபாய் விலையில் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், புத்தாண்டு பண்டிகை காலத்தில் முட்டைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டாலும், அண்மைய நாட்களில் விலை 26 மற்றும் 28 ரூபாவாக ஆக இருந்துள்ளது. அதன்படி, சிறிது காலத்திற்குப் பிறகு முட்டையின் விலை இந்த அளவுக்கு குறைவடைந்துள்ளதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மேலும் படிக்க